சர்க்கரை நோயாளிகளுக்கு புற்றுநோய் உண்டாவது ஏன்?

 

சர்க்கரை நோயாளிகளுக்கு புற்றுநோய் உண்டாவது ஏன்? சர்க்கரை நோயைப் பற்றி முன்னதாக பல கட்டுரைகளை எழுதியுள்ளேன் அவற்றையும் வாசியுங்கள். இந்த கட்டுரையில் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் புற்றுநோயைப் (கேன்சர்) பற்றி மட்டும் பார்ப்போம்.

உடலுக்கு சுயமாக தன்னை தற்காத்துக் கொள்ளும் அறிவு இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உடலின் எதிர்ப்பு சக்தியும், பராமரிப்பு சக்தியும், உடலுக்கு ஒவ்வாத அல்லது அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சுயமாகவே உடலைவிட்டு வெளியேற்றிவிடும்.

அதைப்போன்றே தரம் குறைந்த சர்க்கரை உடலில் தேங்கினாலோ, உடலின் உள்ளுறுப்புகளில் புகுந்தாலோ அந்த உறுப்பை சீர்கெடுத்துவிடும் என்பதால்தான் கணையம் இன்சுலினை சுரப்பதில்லை. 

உடலையும், உள்ளுறுப்புகளையும், ஆரோக்கியத்தையும், பாதுகாக்க உடல் சுயமாக கண்டுபிடித்து வெளியேற்றும் கெட்ட சர்க்கரைகளை, வெளியேற விடாமல் உடலுக்குள்ளேயே தேங்க வைக்கும் வேலையை செய்கிறது சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகள்.

சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் இன்சுலின் பயன்படுத்தும் போது உடலில் தேங்கும் கெட்ட சர்க்கரை, எந்த உறுப்பில் தேங்குகிறதோ, அந்த உறுப்பை பழுதடைய செய்கிறது. நாளடைவில் தேங்கிய கழிவு சர்க்கரை, கட்டியாக (கேன்சராக) உருமாறுகிறது. பெரும்பாலும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் உண்டாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் இரசாயன மருந்து மாத்திரைகளே.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top