அவசரப்பட்டு ஊசியை செலுத்திக் கொள்ளாதீர்கள்
ஊசி
0
Comments
அவசரப்பட்டு ஊசியை செலுத்திக் கொள்ளாதீர்கள். ஆங்கில மருத்துவர்களை நாடும்போது முடிந்த வரையில் ஊசியை செலுத்தி கொள்ளாதீர்கள். மருந்து மாத்திரைகளை அல்லது டானிக்கை வாங்கிக் கொள்ளுங்கள்.
வாய் வழியாக மாத்திரையோ டானிக்கோ அருந்தும் போது அதில் உள்ள உடலுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடிய விஷயங்களை முறிப்பதற்கும் உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும் உரிய ஆற்றல் எச்சிலுக்கும் வயிற்றுக்கும் உள்ளன.
ஊசி வழியாக நேரடியாக ரத்தத்தில் மருந்தை செலுத்தும் போது அதிலிருந்து உடலுக்கு பாதிப்பை உருவாக்கக்கூடிய விஷயத்தை வெளியேற்றும் ஆற்றல் உடலுக்கு இல்லை.
உடலுக்கு ஒத்துக் கொள்ளாத ஊசியோ மருந்தோ அல்லது பக்க விளைவுகளை உருவாக்கக்கூடிய ஊசியோ செலுத்திக் கொள்ளும் போது உடல் நேரடியாக பாதிக்கப்பட்டு உடனடியாக கொடிய பாதிப்புகளையும் மரணத்தையும் கூட உருவாக்கக் கூடும்.

Post a Comment