பெயர் ஒரு மந்திரம்

 
(Photo by Kyle Vaughn on Unsplash)

பெயர் ஒரு மந்திரம். ஒரு மனிதனுக்கு தன் பெயரின் ஆதிக்கம் ஏறக்குறைய முப்பத்தைந்து வயதில் தொடங்கும். அதாவது பிறந்தது முதல் அவன் பெயரைச் சொல்லி பலரும் அழைத்து, அந்தப் பெயர் உருப்பெற்று, அந்த மனிதனின் வாழ்க்கையில் நன்மையையோ தீமையையோ ஏற்படுத்தக்கூடிய காலகட்டம் என்பது முப்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேல்.

மிகவும் சிறப்பான அல்லது மிகவும் மோசமான பெயர் அமைந்துவிட்டால் முப்பத்தைந்து வயதுக்கும் முன்னதாகவே அதன் பலனை சிலர் அனுபவிக்க நேரிடலாம். நாம் நம் கண்கூடாகவே பார்த்திருக்கலாம் நம்மை சுற்றி இருக்கும் சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாறுதல்களை அடைந்தது முப்பத்தைந்து நாற்பது வயதுக்கு மேல் தான். 

இவற்றுக்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஒரு மனிதன் அவன் வாழ்க்கையை புரிந்து கொண்டு ஏன் வாழ்கிறான் எதை நோக்கிப் போகிறான் என்ற தெளிவு அடைவதற்கு நாட்பது வயது ஆகிவிடுகிறது. அதைப்போல் அவருடைய பெயரும் அவன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் நாற்பது வருடங்கள் ஆகி விடுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு நடிகர்களின் பெயர்களையும் பிரபலங்களின் பெயர்களை அர்த்தம் புரியாத சொற்களைக் கொண்ட பெயர்களையும் சூட்டுகிறார்கள். இன்னும் சிலர் பிறமொழி சொற்கள் பயன்படுத்துகிறார்கள் பெயர் அழகாக இருக்கிறது ஆனால் அதன் அர்த்தம் ஆபத்தானதாக இருக்கிறது.

அர்த்தம் புரியாமல் பெயர்கள் சூட்டுவதனால் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு, பிச்சைக்காரன், பிச்சைக்காரி, பைத்தியம், விபச்சாரி, எருமை, என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள். ஏன் அப்படி வைக்கிறார்கள் என்று பார்க்கும்போது அவர்கள் சமஸ்கிருதம், அரபு மொழி, அல்லது அவர்களுக்குப் புரியாத பல பிற மொழிகளில் இருந்து சொற்களை பயன்படுத்தி பெயர் சூட்டுகிறார்கள்.

அவ்வாறான பெயர்களின் உச்சரிப்பு அழகாக இருக்கலாம் ஆனால் அந்த சொல்லின் பொருள் என்ன என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தவறான பொருள் தரக்கூடிய பெயர்களைக் கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மிக மோசமானவர்களாக மாறவும், மோசமான துன்பகரமான வாழ்க்கையை வாழக் கூடிய வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. 

அந்தக் குழந்தையின் விதி பலமாக இருந்தால் இந்த பெயர் ஆபத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது ஆனால் அந்த குழந்தையின் விதி பலவீனமாக இருந்தால் இந்த பெயர் ஆதிக்கம் செலுத்தி அந்தக் குழந்தையின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போடக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது.


ஒரு குழந்தையின் பெயர் அல்லது ஒரு மனிதனின் பெயர் என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம் அதனால் உங்கள் பெயரையும் உங்கள் குழந்தைகளின் பெயர்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள் அதன் பொருள் என்ன என்று ஆராய்ந்து, தவறான அர்த்தம் தரக்கூடிய பெயராக இருந்தால் அந்தப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top