குழந்தைகளுக்கு சினிமா நட்சத்திரத்தின் பெயர்
ஆற்றல்
0
Comments
குழந்தைகளுக்கு சினிமா நட்சத்திரத்தின் பெயர், இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சினிமா நடிகர் நடிகைகளின் பெயர்களையும் பிரபல்யமானவர்களின் பெயர்களையும் விரும்பி சூட்டுகிறார்கள்.
ஒரு பிரபலத்தின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட விரும்பும் பெற்றோர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அந்த பிரபலமாணவரின் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக தெரியாது. அவர் அனுபவிக்கும் நல்லது கெட்டது தெரியாது.
உங்களுக்குத் தெரிந்த அவரின் வாழ்க்கை என்பது நீங்கள் நாளிதழிலோ தொலைக்காட்சியிலோ இணையத்திலோ பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட, விஷயங்களாக இருக்குமே ஒழிய அவரின் உண்மையான குணாதிசயங்களாக, உண்மையான வாழ்க்கையாக இருக்காது.
அதனால் தயவு செய்து பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு சினிமா நட்சத்திரங்களின் பெயர்களையும் பிரபலங்களின் பெயர்களையும் சூட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
உங்களுக்குத் தெரிந்த, பழக்கமான, நல்ல உச்சரிப்பும், நல்ல பொருளையும், தரக்கூடிய பெயர்களை மட்டுமே சூட்டுங்கள். பெயர் என்பது சாதாரண விசயமல்ல அது ஒரு மனிதனின் தலையெழுத்தையே மாற்றக் கூடியது.

Post a Comment