எல்லா நோய்களுக்கும் மூலக்காரணம் இதுதான்
நோய்கள்
0
Comments
எல்லா நோய்களுக்கும் மூலக்காரணம் இதுதான். உடலின் கழிவுகளை வெளியேறவிடாமல் தடுப்பதே அத்தனை நோய்க்கும் மூலக் காரணமாக இருக்கிறது. ஒன்றை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள், உடலில் இருந்து எந்த ஒரு பயனுள்ள, உடலுக்குத் தேவையான பொருளும் இயல்பாக வெளியேறாது. அதனால் உடலில் இருந்து எது சுயமாக வெளியேறினாலும் தடுக்காதீர்கள். உதாரணத்துக்கு...
1. காதுகளில் இருந்து வெளியேறும், நீர், அழுக்கு, சீல், சலம், கட்டி.
2. கண்களில் இருந்து வெளியேறும், அழுக்கு, கண்ணீர், ஊளை.
3. வாயிலிருந்து வெளியேறும், ஏப்பம், எச்சில், ஜொல்லு, வாணி. வாந்தி, இருமல்.
4. தோலின் மூலமாக வெளியேறும், புண்கள், கட்டிகள், அரிப்பு, வியர்வை, கெட்ட வாயுக்கள், சலம்
5. உடலில் இருந்து வெளியேறும், தும்மல், சளி, காய்ச்சல், உஷ்ணம், வயிற்றுப் போக்கு, மலம், சிறுநீர், வாயுக்கள், கெட்ட வாடைகள்.
இவ்வாறு உடலில் இருந்து வெளியேறும் அனைத்துமே உங்கள் உடலுக்குத் தேவையற்ற விசயங்கள் மற்றும் உங்கள் உடலுக்கு ஒவ்வாதவை. அவை நோய்களையும், தொந்தரவுகளையும் உருவாக்கக் கூடியவை.
அதனால்தான் இவற்றை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இதைப் புரிந்துகொண்டு, உடலில் இருந்து வெளியேறும் எதையும், எந்தக் காரணத்தைக் கொண்டும் தடுக்கக் கூடாது.
மேலே குறிப்பிடப்பட்ட எதுவுமே நோயல்ல, இவை உடலைத் தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் மட்டுமே. உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளைத் தடுப்பதே, மனிதனின் அனைத்து தொந்தரவுகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது.
சிறு வயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்துகளே, கழிவு வெளியேற்றத்தைத் தடுத்து பிள்ளைகள் பெரியவர்கள் ஆனபிறகு உருவாகும் பெரும்பாலான நோய்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது.

Post a Comment