மனிதனின் விதியை மாற்ற முடியுமா?
மனிதனின் விதியை மாற்ற முடியுமா? நிச்சயமாக மனிதனின் விதியை மாற்ற முடியும். ஒவ்வொரு தனி நபரும், அவரின் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து, முடிவு செய்து, அதற்குரிய உழைப்பையும் முயற்சிகளையும் செலுத்தினால் கண்டிப்பாக அவரின் விதியை அவரால் மாற்ற முடியும்.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனிதர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப அவர்களின் விதியும் மாற்றமடைகின்றது.
தெளிவாகவும் விரிவாகவும் சிந்தித்து செயல்படுபவர்கள் விதியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியும். அவர்களின் துன்ப துயரங்களும் குறையும். அதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரப்படாமல் பதட்ட படாமல் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
