அக்ரிமோனி மலர் மருந்து


அக்ரிமோனி மலர் மருந்து (Agrimony), தனக்குள் இருக்கும் மன உளைச்சல், மன வேதனை, மன அழுத்தம், போன்றவற்றை மறைத்து; வெளிப்புறத்தில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் நபர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


அக்ரிமோனி மலர் மருந்தின் குணாதிசயங்கள்

அக்ரிமோனியின் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், மன வேதனையை மறைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்று பாசாங்கு செய்வார்கள். மனதின் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பார்கள்.

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை மறைத்து, வெளிப்புறத்தில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தோற்றமளிப்பார்கள். ஆழ்மனதில், கவலை, வலி, வேதனை, பயம், போன்றவை இருந்தாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள். மனதில் உள்ள கவலை மற்றும் எண்ணங்களால் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள்.


அக்ரிமோனி மலர் மருந்தின் பயன்கள்

அக்ரிமோனி மலர் மருந்து மன அமைதியைக் கொடுத்து அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்கும், மற்றும் அதிகமாக பிடிவாதம் பிடிக்கும் நபர்களுக்கும் இது உதவுகிறது. உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆல்கஹால் அல்லது போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் தங்கள் மன வேதனை மற்றும் மன அழுத்தத்தை மறைக்க முயற்சிக்கும் போதும் இது உதவும். அவர்களுக்கு மன அமைதியைக் கொடுத்து போதைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது.


இந்த மலர் மருந்து மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

To Top