ஆரோக்கியத்தை அளந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள்

ஆரோக்கியத்தை அளந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன்,எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோ சன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவையில்லை. ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கவும் தேவையில்லை. கீழே குறிப்பிடப்பட்ட ஐந்து விஷயங்களைக் கவனித்தாலே போதுமானது.

ஒரு ஆரோக்கியமான மனிதனின் அடையாளங்கள் தரமான பசி, தரமான தாகம், தரமான உறக்கம், முழுமையான கழிவு நீக்கம், மன அமைதி.


தரமான பசி

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு உழைப்புக்கு ஏற்ற பசி இருக்க வேண்டும். உழைப்பு குறைவாக இருந்தால் பசியின் அளவும் குறைவாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு வேளையாவது பசி உண்டாக வேண்டும். உட்கொண்ட உணவு எளிதில் ஜீரணமாக வேண்டும். உணவை உட்கொண்ட பிறகு வயிறு உப்புசம், வயிற்றில் பாரம், அசதி, தூக்கம், போன்றவை உண்டாகக் கூடாது.


தரமான தாகம்

உழைப்புக்கு ஏற்ற தாகம் மட்டுமே இருக்க வேண்டும். அளவான தாகம் உருவாக வேண்டும். உதடு காய்வது தாகம் அல்ல.


தரமான உறக்கம்

படுக்கைக்குச் சென்ற பத்து நிமிடங்களில் உறங்கிவிட வேண்டும். இடையில் காலை வரையில் எழுந்திருக்கக் கூடாது. தூங்கி எழும் பொழுது அசதி இருக்கக் கூடாது உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.


முழுமையான கழிவு நீக்கம்

தினமும் காலையில் சுலபமாக மலம் கழிக்க வேண்டும். மலம் முழுமையாக, சுலபமாக, வெளியேற வேண்டும். மலம் கழித்த திருப்தி இருக்க வேண்டும். சிறுநீர் சுலபமாக வெளியேற வேண்டும். சிறுநீர் கழித்த திருப்தி இருக்க வேண்டும்.


மன அமைதி

எந்நேரமும் மனம் அமைதியாக இருத்தல் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மனதில் அச்சம், குழப்பம், சோர்வு, கர்வம், எரிச்சல், போன்றவை உருவாகக் கூடாது. அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோபம் , தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் போன்ற எதுவும் உருவாகக் கூடாது. மனம் எப்போதும் சமநிலையில், நிதானத்தில் இருக்க வேண்டும்.


பசி, தாகம், உறக்கம், கழிவு நீக்கம், மற்றும் மன அமைதி, மேலே குறிப்பிட்ட ஐந்தும் குறைந்தாலும், அதிகரித்தாலும், ஆரோக்கியக் குறைபாடு உருவாக வாய்ப்புள்ளது.


உடலின் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள

1. பசி இன்றி உணவை உட்கொள்ளக்கூடாது.

2. தாகம் இன்றி தண்ணீர் அருந்தக்கூடாது

3. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

4. தினமும் காலையில் கழிவுகளை வெளியேற்றிவிட வேண்டும்.

5. மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாகவும், அளவாகவும் இருந்தால், அந்த மனிதன் நிச்சயமாக ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான். நோய்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும். மேலே குறிப்பிடப்பட்ட வற்றை சீர்செய்தால், நிச்சயமாகக் குணமாகும்.


உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், உங்கள் உடல் உங்களைக் கவனித்துக் கொள்ளும்

To Top