உடலின் உள் உறுப்புகளை பராமரிக்கும் சுவைகள்
உடலின் உள் உறுப்புகளை பராமரிக்கும் சுவைகள். எதற்கெடுத்தாலும் மருந்து, மாத்திரை, மருத்துவர், மருத்துவம் என்று திரியாமல், உடல் உறுப்புகளையும், உடலின் இயக்கத்தையும் பராமரித்தால் உடலில் எந்த பாதிப்பும், நோயும், உண்டாகாது.
நம் உடலின் முழு ஆரோக்கியத்தையும், நம் வாழ் நாட்களின் நீளத்தையும், உடலின் உள்ளுறுப்புகளை தீர்மானிக்கின்றன. நமது முகமும், வெளித் தோற்றமும் எவ்வளவு அழகாக இருந்தாலும், உள்ளுறுப்புகள் பலவீனம் அடைந்துவிட்டால், உடல் உபாதைகளும், நோய்களும், மரணமும், எந்த நிமிடத்திலும் உண்டாகக்கூடும்.
பலர் ஆரோக்கியமாக இருப்பதைப் போன்று தோன்றினாலும், திடீரென்று நோய்களும், உறுப்பு பாதிப்புகளும், மரணமும், ஏற்படுவதற்கு உள்ளுறுப்புகளின் பலவீனமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், உள்ளுறுப்புகளின் பாதிப்புகளை சில வேளைகளில் சம்பந்தப்பட்ட நபர்களால் உணர முடிவதில்லை.
உடலின் உள்ளுறுப்புக்குத் தேவையான சுவைகளை சரியாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலின் உள் உறுப்புகளும், வெளி உறுப்புகளும் பலம் பெறும். ஆரோக்கியமாகவும் முழுமையாகவும் இயங்கும். நோய்களும் உறுப்பு பாதிப்புகளும் உருவாகாமல் தடுக்கும்.
உடலின் உள் உறுப்புகளும் அவற்றுக்குத் தேவையான சுவைகளும்
இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு, மற்றும் காரம் என ஆறு சுவைகளும் தினமும் உணவில் இருக்குமாறு உணவு பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.

Post a Comment