அஜீரணமும் மலச்சிக்கலும்
அஜீரணம்
0
Comments
அஜீரணமும் மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். காரணம் அஜீரணம் தான் மனிதர்கள் அனுபவிக்கும் அத்தனை நோய்களுக்கும் அத்தனை தொந்தரவுகளுக்கும் மூலக் காரணமாக இருக்கிறது.
ஜீரணம் சரியாக நடைபெறாததால், மலச்சிக்கல் உருவாகிறது. அஜீரணமும் மலச்சிக்கலும் உருவானால் பலவகையான தொந்தரவுகளும் உடலில் தோன்றிவிடும். ஜீரணம் சீர்கேடு அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. ஜீரணம் சீர்கேடு அடைய முதல் முக்கியமான காரணம், பசியின்றி உணவை உட்கொள்வது.
2. அடுத்தது உணவை நன்றாக மெல்லாமல் விழுங்குவது.
3. உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது.
4. சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் அருந்துவது.
5. சாப்பிடும் போது உணவின் மீது கவனம் செலுத்தாமல் மற்ற சிந்தனைகளில் மூழ்குவது, தொலைக்காட்சி பார்ப்பது, பாடல்கள் கேட்பது, வாசிப்பது, அரட்டை அடிப்பது, தொலைப்பேசியை பயன்படுத்துவது.
6. இரசாயனங்கள் கலந்த மற்றும் புட்டியில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது.
7. அதிகமாக இனிப்பு, காரம் அல்லது புளிப்பு, சுவைக்கொண்ட உணவுகளை உண்பது.
8. இரவில் தாமதமாக சாப்பிடுவது, தாமதமாக உறங்கச் செல்வது.
9. மன நிம்மதி அற்று இருப்பது.
10. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.

Post a Comment