ஊமைக் கண்ட கனவு - காதல் கவிதை
உனக்குப் பிடிக்குமென்று
தினம் தினம் வாங்கித் தந்த
பூக்கள் அனைத்தையும்
மொத்தமாக சேர்த்து வைத்து
என் காதிலேயே சூட்டி
அழகுப் பார்த்துவிட்டாயே
ஊமைக் கண்ட கனவானது
என் காதல்...
விளக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
திண்டாடுகிறேன்
