வாயும் வயிறும் குப்பைத் தொட்டிகள் அல்ல
ஆரோக்கியம்
0
Comments
வாயும் வயிறும் குப்பை தொட்டிகள் அல்ல. பெரும்பாலான நபர்கள் வாயில் எதைப் போட்டாலும் வயிறு அதை ஜீரணித்து சக்தியாக மாற்றிவிடும் என்று எண்ணுகிறார்கள்.
இப்போது நாம் உட்கொள்வது உணவா? இதை உடலால் ஜீரணிக்க முடியுமா? இது நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளுமா? இதை உட்கொள்வதால் நமக்கு எந்த பயனாவது உண்டா? என்று எதையும் சிந்திக்காமல் கவர்ச்சிக்காகவும், வாசனைக்காகவும், சுவைக்காகவும், கண்டதையும் உட்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.
மனிதர்களின் வாயும் வயிறும் இயற்கையால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை உண்பதற்காகவும் ஜீரணிப்பதற்காகவும் மட்டுமே வழங்கப் பட்டுள்ளன. அவை இரசாயனங்களைக் கொண்டு, செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவையும், மருந்துகளையும் ஜீரணம் செய்யாது.
அப்படியானால் நாம் உட்கொள்ளும் இரசாயன உணவுகளும் மருந்துகளும் என்னவாகும்? நாம் உட்கொன்றவற்றில் உடலுக்கு உதவக்கூடிய விசயங்கள் ஏதாவது இருந்தால் அவற்றை உடல் கிரகித்துக் கொண்டு மற்றவற்றைக் கழிவாக வெளியில் அனுப்பிவிடும்.
இப்படி உடலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் மிகக் கடுமையான, கொடுமையான இரசாயனங்கள் உடலால் வெளியேற்ற முடியாத போது, சில கழிவுகள் உடலுக்குள்ளேயே தேங்கிவிடும். இவ்வாறு உடலுக்குள்ளேயே தங்கி விடும் கழிவுகளே பெரும்பாலான உடல் உபாதைகளையும் தொந்தரவுகளையும் உருவாக்குகின்றன.

Post a Comment