ஆரோக்கியம் அனைவருக்கும் இலவசம்
ஆரோக்கியம்
0
Comments
ஆரோக்கியம் அனைவருக்கும் இலவசம். உண்மை என்னவென்றால் நோயாளியாக மாரத்தான் அதிகம் செலவுகள் செய்ய வேண்டும், அதிக உழைப்பு வேண்டும். ஆரோக்கியம் இலவசம்தான்.
ஆரோக்கியமாக வாழ வழிசொல்வதைப் போன்ற பாவனையில், நோயாளிகளாக மாற வழி சொல்வதுதான் இன்றைய ஆங்கில மருத்துவத்தின் கேடுகெட்ட வியாபார உக்தி. இது பெரும்பாலான ஆங்கில மருத்துவர்களுக்கே தெரியாது, மருந்து கம்பெனிகள் சொல்வதை கேட்டு மக்களிடம் சொல்கிறார்கள்.
இன்றைய மருத்துவ வியாபாரிகள் ஆரோக்கியமாக வாழ வழி சொல்வதைப் போன்று நோயாளிகளாக மாற வழி சொல்கிறார்கள். மருத்துவர் சொல்கிறார், விஞ்ஞானி சொல்கிறார், என்று நாமும் நம்புகிறோம். ஆனால் அந்த விஞ்ஞானியும் மருத்துவரும் ஏதோ ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஊழியர் என்பதை மறந்து விட்டோம்.
ஒருவர் நோயாளியாக மாறுவதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. ஒரு ஆங்கில மருத்துவரை சென்று பார்த்தால் போதும். உங்கள் உடலில் அது அதிகம், இது அதிகம், அது குறைவு, இது குறைவு என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி உங்களை நோயாளியாக மாற்றிவிடுவார்.
நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள், ஆங்கில மருத்துவம் என்பது சேவையல்ல வியாபாரம், வியாபாரிகளின் ஒரே நோக்கம், லாபம். பணம் மட்டுமே அவர்களின் நோக்கம், நீங்கள் நோயாளிகளாக இருக்கும் வரை தான் அவர்களுக்கு வருமானம்.

Post a Comment