நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு - 2
உணவு
0
Comments
உடலில் சேரும் கழிவுகள் பெரும்பாலும் உணவில் கலந்திருக்கும் இரசாயனங்களில் இருந்தும், உடலுக்கு ஒவ்வாத எளிதில் ஜீரணிக்க முடியாத உணவு வகைகளில் இருந்தும் சேருகின்றன. உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத உணவு வகைகளை உட்கொள்ளும் போது செரிமானம் முழுமையாக நடைபெறாமல் உடலில் சக்தி தட்டுப்பாடு ஏற்படுகிறது. அஜீரணத்தையும் ஆற்றல் தட்டுப்பாட்டையும் உருவாக்காத எந்த உணவையும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சாப்பிடலாம்.
இறைவன் படைத்த மனிதனுக்கான உணவுகளில் எந்த உணவுமே தூய்மையான வெண்மை நிறத்தில் இருக்காது. அதாவது இன்று நாம் பயன்படுத்தக்கூடிய, தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் பால், சீனி, உப்பு, மாவு வகைகள், பட்டைதீட்டிய அரிசி, வெள்ளை கோழி போன்றவை மனிதர்களுக்கான உணவுகள் அல்ல. இவை மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட உணவு வகைகள்.
இவ்வகையில் தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் செயற்கை உணவுகளை பெரும்பாலான மனிதர்களால் ஜீரணிக்க முடியாது. செயற்கை உணவுகள் உடலில் கழிவுகளாக தேங்குகின்றன, அதே நேரத்தில் அவற்றால் உடலில் சத்து பற்றாக்குறையும் ஏற்படுத்துகிறது.
அதனால் அனைவரும் தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் எல்லா உணவு வகைகளையும் உண்ணாமல் தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தூய வெள்ளை நிறத்தில் இருக்கும் உணவுகளை கொடுக்காதீர்கள்.

Post a Comment