மலங்களை உடலில் சேரவிடாதீர்கள் - 1
ஆரோக்கியம்
0
Comments
மலங்களை உடலில் சேரவிடாதீர்கள். வீட்டில் குப்பையை சேர்க்கக்கூடாது என்று தெரிந்த நம்மில் பலருக்கும் உடலில் குப்பையை சேர்க்கக்கூடாது என்பது தெரிவதில்லை. வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யும் பலரும் உடலின் சுத்தத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. உடலின் சுத்தத்தைப் பேணுபவர்களும் பெரும்பாலும் உடலின் வெளி சுத்தத்தை மட்டுமே சிந்திக்கிறார்கள்.
உடலின் வெளிப்புறத்தில் ஒரு பாதிப்பு உருவானால் அது உடலின் அழகையும் தோற்றத்தையும் மட்டுமே பாதிக்கக்கூடும். ஆனால் உடலின் உட்புறத்தில் ஒரு பாதிப்பு உருவானால் அது உறுப்பின் செயலிழப்பு முதல் மரணம் வரையில் பலவற்றை உண்டாக்கக் கூடும். இதன் மூலமாக உடலின் சுத்தம் என்றாலே உடலின் உள்ளே சுத்தமாக வைத்திருப்பது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தோல் முதல், வெளி உறுப்புகள், உள் உறுப்புகள், குடல், ரத்தம், நிணநீர், செல்கள் என உடலில் பல பகுதிகளில் கழிவுகள் தேங்கி இருக்கும். இவ்வாறு தேங்கும் கழிவுகளே உடலில் நோய்களையும் உறுப்பு பாதிப்புகளையும் உருவாக்குகின்றன. அக்கழிவுகளை தேங்கவிடாமல் வெளியேற்றுவதே உடலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் வழியாகும்.
இன்றைய தவறான உணவு முறைகளாலும் தவறான வாழ்க்கை முறைகளாலும் மலச்சிக்கல் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பரவலாக இருக்கும் தொந்தரவாகும். மலம் கழிக்கும் போது சில வேளைகளில் மலம் கருப்பாகவும், இறுக்கமாகவும், புழுக்கையாகவும், பலவிசயங்கள் கலந்தது போலவும் வெளியேறும் இவை உடலில் தேங்கி இருந்த பழைய மலங்கள்.
இவ்வாறு வெளியேறிய பழைய மலங்கள் இத்தனை நாட்களாக உங்கள் குடலுக்குள் தான் இருந்தன என்பதையும் அவைப் போன்று இன்னும் பழைய மலங்கள் உங்கள் குடலுக்குள் தேங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தொடரும் …

Post a Comment