வயதும் அழகும் மரணமும்
ஆரோக்கியம்
0
Comments
வயதும் அழகும் மரணமும். ஒரு மனிதனின் உண்மையான ஆரோக்கிய நிலையை உடலின் வெளிப்புறத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அறிந்துகொள்ள முடியாது. உடலின் வெளிப்பகுதி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உடலின் வெளியில் குறிப்பிடும் அளவுக்கு பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலும் கூட ஒரு நபர் நோய் உள்ளவராக இருக்கலாம்.
ஆரோக்கியம் என்று சொன்னாலே முழுமையான ஆரோக்கியம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். உடலின் உள்ளும், புறமும், மனமும் ஆரோக்கியமாக தடைகளின்றி தனது இயல்பில் இயங்க வேண்டும். தோலின் அழகை, அல்லது முகத்தின் அழகை மட்டும் கணக்கில் கொண்டு ஆரோக்கியத்தை அளவிடக் கூடாது.
அண்மையில் நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். அவர் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரையில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால், பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்தார். ஆரோக்கியமாக இருப்பதைப் போல் தெரிந்த அவர் ஏன் திடீரென்று மரணமடைந்தார்? அவரின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனாலும்.
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் மூன்று முக்கியமான விசயங்களை நமக்கு அறிவிக்கிறது. ஒன்று மனிதனின் வயதுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை, யாருக்கும் எப்போதும் மரணம் வரலாம். இரண்டு, உடலின் வெளியில் இருந்து நாம் காணும் ஆரோக்கியத்துக்கும் உடலின் உள்ளே இருக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. தோல் அழகாக பளபளப்பாக இருக்கலாம் ஆனால் உடலின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இல்லை என்றால் நோயும் மரணமும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மூன்றாவது இரசாயனங்கள் எப்பொழுதும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைத் தருவதில்லை.
இவை மூன்றும், நம் கண்களின் முன்பும், நம்மைச் சுற்றியும், பலருக்கு நடக்கும் விசயங்கள்தான், ஆனாலும் ஒரு பிரபல நடிகைக்கு நடந்தால்தான் நமக்குப் புரிகிறது. அழகாக இருப்பதற்காக கிரீம், எண்ணெய், சோப்பு மற்றும் பல இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதும், உடலில் ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் மருந்து என்று நம்பி இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஆங்கில மருந்துகளை உட்கொள்வதும் நமக்கு வாடிக்கையாகி விட்டது. இவை தவறு என்பதை ஒரு நடிகையின் மரணம் நிரூபித்துவிட்டது.

Post a Comment