நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு - 1

 

நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடக் கூடாது. இரத்த கொதிப்பு உள்ளவர்கள் அதை சாப்பிடக்கூடாது; என்று ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு வகையான உணவு கட்டுப்பாட்டை விதிப்பார்கள். 

ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு வகையான உணவு முறையையும், தவிர்க்க வேண்டிய சில உணவுகளையும், அதிகமாக சாப்பிட வேண்டிய சில உணவுகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

நோய் உண்டாவதற்கு பெரும்பாலும் இரண்டே காரணங்கள் தான் உள்ளன, ஒன்று நோயாளியின் உடலில் சேரும் கழிவுகள்; இன்னொன்று நோயாளியின் உடலில் உண்டாகும் ஆற்றல் தட்டுப்பாடு. 


இவ்விரண்டையும் தவிர மற்ற காரணங்களால் நோய் உண்டாவது அரிதானது. அதனால் உணவுக் கட்டுப்பாடு என்பது

1. எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை உட்கொள்வதும்.
2. உணவின் கழிவுகள் உடலில் தேங்காமல் பார்த்துக் கொள்வதும். 
3. உடலுக்குத் தேவையான ஆற்றல்களை பூர்த்தி செய்யகூடிய உணவை தேர்வு செய்வதாகவும் இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு நோய் கண்டவருக்கும் ஒருவகையான உணவு முறையை உருவாக்குவதைவிடவும். மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய உணவு வகைகளை தவிர்த்துக் கொண்டால் பல உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம்.

தொடரும்…

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top