விரதம் மனதுக்கான பயிற்சி

 

விரதம் மனதுக்கான பயிற்சி. சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களும், உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதும், மிகவும் குறைவாக உணவை உட்கொள்வதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 

ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் உணவைக் குறைப்பதற்குக் காரணம், வயிறு காலியாக இருந்தால்தான் உடல் நாம் சொல்வதைக் கேட்கும், அடுத்தது பசியோடு இருக்கும் போதுதான் மனதை நம் தேவைக்குப் பழக்க முடியும்.

உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், நோய்களை குணப்படுத்தவும், மற்றும் மனதை கட்டுப்படுத்தி நமது நோக்கத்துக்கு ஏற்ப பழக்கவுமே நோன்பு அல்லது விரதம் என்ற ஒரு பழக்கம் பாரம்பரியமிக்க இனங்களில் காலாகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top