உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய சுவைகள்
ஆரோக்கியம்
0
Comments
உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய சுவைகள். மனித உடலின் முழுமையான இயக்கத்துக்கு உணவிலிருந்து கிடைக்கக்கூடிய ஆறு சுவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஆறு சுவைகளும் தேவையான அளவு இருக்கும் போது, உடல் முழுமையாகவும் சீராகவும் இயங்கும். அந்த சுவைகளில் பற்றாக்குறை உண்டாகும்போது உடலிலும் குறைபாடுகளும் பலவீனங்களும் உருவாகத் தொடங்கும்.
இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு, மற்றும் காரம் என ஆறு சுவைகளும் இயற்கையான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இயற்கை உணவுகள், மற்றும் இயற்கை உணவு சமையலில் இருந்தும், உருவாகக் கூடிய சுவைகளாக இருக்க வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவைகளும் சுவையூட்டிகளும் இதற்குப் பொருந்தாது.
இந்த சுவைகள் இயற்கையான உணவுகளிலிருந்து கிடைக்கும் போது உடல் உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கின்றன. அதே நேரத்தில் இந்த சுவைகள் செயற்கையான பொருட்களிலிருந்து கிடைக்கும் போது அதன் தொடர்புடைய உறுப்புகளில் பாதிப்பை உருவாக்குகின்றன.

Post a Comment