உடல் கேட்கும் சுவையும் உடலின் பாதிப்பும்
உடல் கேட்கும் சுவையும் உடலின் பாதிப்பும். ஒருவரின் உடல் மிகவும் விரும்பும் அல்லது அறவே ஒதுக்கும் சுவையைக் கொண்டு அவரது உடல் உறுப்பின் தன்மைகளை அறிந்துக் கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு ஒருவர் இனிப்பை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார் என்றால், அவரின் வயிறு பலவீனமாக இருக்கிறது என்று பொருளாகும், அல்லது அவருடைய வயிற்றுக்கு சக்திப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். அதைப்போல் ஒருவர் இனிப்பை அறவே ஒதுக்குவார் ஆனாலும் அவருக்கும் வயிற்றில் அல்லது மண்ணீரலில் பாதிப்புகள் இருக்கலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்துக்கும் ஒரு குறிப்பிட்ட சுவைத் தேவைப்படும், அதனால் உடல் உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு அல்லது இயக்கச் சக்தி தட்டுப்பாடு உண்டானால், அவரின் உடல் அந்த குறிப்பிட்ட சுவையை அதிகமாக விரும்பிக் கேட்கும்.
ஒருவர் அதிகமாக விரும்பி உண்ணும் அல்லது அறவே வெறுக்கும் சுவையை கவனித்தால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதைகளையும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகளையும், முன்கூட்டியே கணித்துவிட முடியும்.

Post a Comment