மனித உடல் அமைப்பு - 5
ஆரோக்கியம்
0
Comments
மனித உடல் அமைப்பு. முந்தைய கட்டுரையில் எந்த நோயும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உறுப்பில்தான் இருக்க வேண்டும், வலிக்கும் இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்பதைப் பார்த்தோம். அவ்வாறு இருக்கையில், உண்மையான பாதிக்கப்பட்ட உறுப்பைக் கண்டுபிடிக்காமல், தொந்தரவு தோன்றும் இடத்தையே நோண்டிக் கொண்டிருந்தால் எவ்வாறு நோய் குணமாகும்?.
உதாரணத்துக்கு, நீரிழிவு நோயை எடுத்துக் கொள்வோம். நீரிழிவு நோய் ஏன் உருவானது என்று கேட்டால், டாக்டர்கள் பல காரணங்கள் சொல்வார்கள். பெற்றோரிடம் இருந்து வந்தது, பன்கிரியாஸ் வேலை செய்யவில்லை, மன அழுத்தம், சோறு சாப்பிடுவது, இந்திய மரபணுவில் இந்த நோய் உள்ளது, இப்படிப் பல விளங்காத விஷயங்களை சொல்வார்கள். பல இயற்கை மருத்துவர்களும் இவற்றைத்தான் நோய் உருவானதற்கான காரணமாகக் கூறி வைத்தியம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
சரி, நீரிழிவு நோய்க்கான உண்மைக் காரணத்தை கண்டறிவோமா? நீரிழிவு நோய் உருவாக பெரிய காரணம் ஒன்றும் கிடையாது, வெறும் சாதாரண செரிமான கோளாறு மட்டுமே. இந்த சாதாரண காரணம் அறியாமல்தான் பல ஆயிரம், பல லட்சம் பறித்துக் கொண்டு, நீரிழிவு நோயாளிகளை, குணப்படுத்த முடியாமல் கடைசிவரை நோயாளிகளாகவே வைத்திருக்கிறார்கள், அவர்களின் தொந்தரவுகளை மேலும் அதிகமாக்குகிறார்கள்.
அஜீரணத்தை சரிசெய்தாலே நீரிழிவு நோய் குணமாகிவிடும். ஆனால் அவ்வாறு செய்தால் மருத்துவருக்கும், மருத்துவமனைக்கும், மருந்தை விற்பனை செய்பவருக்கும், மருந்தை உற்பத்தி செய்பவர்களுக்கும் வருமானம் இல்லாமல் போய்விடும்.

Post a Comment