அஜீரணத்தை குணப்படுத்தும் வழிமுறைகள்
அஜீரணம்
0
Comments
அஜீரணத்தை குணப்படுத்தும் வழிமுறைகள். ஜீரணம் சீராகி உண்ணும் உணவு முறையாக செரிமானமாகி அனைத்து சத்துக்களும் உடலில் சார்ந்து மீதமுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற சில ஆலோசனைகள்.
1. பசியின்றி சாப்பிடாதீர்கள். சாப்பிடும் போது பசி அடங்கிவிட்டால் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
2. உணவை நன்றாக பொறுமையாக, மென்று விழுங்குங்கள்
3. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள்
4. சாப்பிடும்போது தேவையில்லாமல் அதிகமாக தண்ணீர் அருந்தாதீர்கள்
5. சாப்பிடும் போது உணவின் மீது கவனம் செலுத்துங்கள்
6. இரசாயனம் கலந்த உணவுகள் அல்லது புட்டியில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்
7. உணவில் இனிப்பு, காரம் மற்றும் புளிப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
8. இரவு உணவை மாலை 6 - 7 க்குள் முடித்துக் கொள்ளுங்கள்.
9. இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள்.
10. மனதைக் குழப்பமின்றி, கவலையின்றி, நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
11. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.
12. இரவில் சமைத்த உணவை தவிர்த்து, பழங்களை மட்டுமே சாப்பிடுங்கள்.
மேலே கூறப்பட்டவற்றை பின்பற்றினால், உடலில் ஜீரணம் முறையாக நடக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Post a Comment