ரெய்கி தீட்சையை பயன்படுத்தும் கால அளவு

ரெய்கி தீட்சையை பயன்படுத்தும் கால அளவு. ஒருவர் ஒருமுறை முழுமையாக ரெய்கி தீட்சை (attunement) பெற்றுவிட்டால், அவர் பெற்ற தீட்சையும் ஆற்றலும் இறுதி வரையில் அவருடன் இருக்கும். நெடுங்காலம் பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ, ஆற்றலின் வீரியம் சற்று குறையலாம், அல்லது அதன் பிரதிபலிப்பு தாமதமாகலாம். மற்றபடி ஒருமுறை முறையாகவும் முழுமையாகவும் தீட்சை பெற்றுவிட்டால், இறுதிவரையில் ரெய்கி அவருடன் தொடர்பில் இருக்கும்.

தொடர்ந்து நெடுங்காலம் பயன்படுத்தாமல் இருந்தாலோ, பயிற்சிகள் செய்யாமல் இருந்தாலோ, பெட்ரோல் தீர்ந்து போன வாகனத்தைப் போன்று, உடலும், மனமும், ஆராவும், சக்ராக்களும், ஆற்றலை இழக்கலாம். மீண்டும் ஒழுங்குடன் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது, அவை அனைத்தும் மீண்டும் முறையாக செயல்படத் தொடங்கிவிடும்.

ஒருவேளை முறையாக அல்லது முழுமையாக தீட்சை பெறவில்லை என்று ஒருவர் கருதினால் வேறு ஒரு நல்ல மாஸ்டரிடம் மீண்டும் ரெய்கி தீட்சை பெற்றுக் கொள்வது சிறப்பாகும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top