ஜாதகம் மற்றும் ஜோதிடத்தின் பயன்பாடு என்ன?

ஜாதகம் மற்றும் ஜோதிடத்தின் பயன்பாடு என்ன? ஜாதகமும் ஜோதிடமும் நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் அல்ல. ஜாதகத்தில் உள்ளப்படியோ ஜோதிடர்கள் கூறும்படியோ தான் நம் வாழ்க்கை அமையும் என்று எந்த அவசியமும் கிடையாது. இந்த உலகில் அனைத்துமே மாற்றத்துக்குரியவை, எதுவும் எப்போதும் மாறலாம்.

நம் முயற்சிக்கும் உழைப்புக்கும் ஏற்றவாறே நம் வாழ்க்கையும் வாழ்க்கையின் பலன்களும் அமைகின்றன. ஜாதகமும் ஜோதிடமும் பாதை காட்டும் வரைபடத்தைப் போன்ற (மேப்) வழிகாட்டி மட்டுமே. நாம் போகும் பாதை சரியா என்பதை சரி பார்த்துக் கொள்ளும் ஒரு கருவி. 

ஜாதகமும் ஜோதிடமும், நாளும் கிழமையும், நல்ல நேரமும் கெட்ட நேரமும், கிரக அமைப்பும், ராசியும், நாம் எதை எல்லாம் செய்யலாம் எதையெல்லாம் செய்யக்கூடாது; எதை எப்போது செய்ய வேண்டும், எப்போது செய்யக்கூடாது; எதுவெல்லாம் நமக்கு சாதகமாக அமையும் எதுவெல்லாம் எதிராகச் செயல்படும் என்பதை மட்டுமே காட்டுகின்றன.

இவற்றைப் பயன்படுத்தி, சிந்தித்து, ஆராய்ந்து, சரியாகத் திட்டமிட்டு, சரியான நேரத்தில், சரியானவற்றை, சரியாக செய்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top