துணையாக வருவாயா?
கவிதைகள்
0
Comments
மனித வாழ்க்கை
நெடுந்தூரம் கடக்கும்
குறுகியப் பயணம்
அதைக் கடப்பது சுலபம்
நிமிர்ந்து நடப்பது கடினம்
கடக்க வேண்டிய பாதை
கண்முன்னே இருந்தும்
பயணத்தைத் தொடங்கவில்லை
வழித்துணை இல்லை
எனக்கும் துணிவில்லை
துணையாக வருவாயா? நீ
என் கல்லறை வரையில்
கைகோர்த்துக் கொண்டு

Post a Comment