உணர்ச்சிகள் உடலின் உறுப்புகளை பாதிக்குமா?
உடல்
0
Comments
உணர்ச்சிகள் உடலின் உறுப்புகளை பாதிக்குமா? மனதில் உருவாகும் உணர்ச்சிகள் வெகு நாட்களுக்கு தன்மை மாறாமல் மனதிலேயே தேங்கி இருக்கும் போது, அவ்வை மனதிலும் உடலிலும் பல பாதிப்புகளை உருவாக்குகின்றன.
ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமை, போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, இருதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுகள், நாக்கு போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.
கவலை, துக்கம் போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.
ஏக்கம், பற்று, நெடுநாள் கவலை, போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது நுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை, போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.
அச்சம், பயம், காமம், போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது, போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.
பொறாமை, எரிச்சல், கோபம், வெறுப்பு, போன்ற உணர்ச்சிகள் மனதில் வெகு நாட்களுக்கு தேங்கும் போது, கல்லீரல், பித்தப்பை, தசைநார்கள், கண்கள், போன்ற உடலின் பகுதிகளை பாதிக்கின்றன.
உணர்ச்சிகள் மனதில் மட்டும் தாக்கத்தை உருவாக்குவதில்லை, அவை உடலையும், உடலின் இயக்கத்தையும், உடல் உறுப்புகளையும் வெகுவாக பாதிக்கின்றன. இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மன அமைதியையும் மனதின் சமநிலையையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

Post a Comment