கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள்
கர்ப்பம்
0
Comments
(Photo by Sheila Marie on Unsplash)
கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள். பெரும்பாலான கர்ப்பமுற்ற தாய்மார்கள், இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின், குளுக்கோஸ் போன்ற மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள்.
இவற்றை ஏன் உட்கொள்கிறார்கள் என்று கேட்டல், குழந்தையின் ஆரோக்கியத்துக்காக டாக்டர் பரிந்துரைத்தார் என்று கூறுவார்கள். ஆனால் இந்த மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக பிறந்த என் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், இவற்றை உட்கொள்ளத் தொடங்கியப் பிறகு பிறந்த மனிதர்கள் 60 வயதைத் தாண்டுவதே இயலாத காரியமாக இருக்கிறதே ஏன்? என்று யாரும் டாக்டர்களை கேள்வி கேட்பதில்லை.
நீங்கள் கேட்கலாம் வைட்டமின், கால்சியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் உடலுக்கு அவசியம் தானே அவற்றை உட்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்று. இயற்கையில், இயற்கையால் உருவாகும் கால்சியம், வைட்டமின், போன்ற சத்துக்களுக்கும் டாக்டர்கள் பரிந்துரைக்கும், மருந்து கம்பெனிகள் உருவாக்கும் செயற்கை சத்துக்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? இயற்கையாக மண்ணில் விளைந்த மலர்களுக்கும், பிளாஸ்திக் மலர்களுக்கும் உள்ள வித்தியாசம். இரண்டையுமே நாம் மலர்கள் என்றுதான் கூறுகிறோம், ஆனால் உண்மையில் அவை இரண்டும் ஒன்றல்ல.
இரசாயனங்களிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கர்ப்பமுற்ற தாய்மார்கள் மட்டுமின்றி, யாரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் வைட்டமின், கால்சியம், போன்ற செயற்கை ஊட்டச்சத்து மாத்திரைகளையும், சோடியம் கலந்த உப்புக்களையும் உட்கொள்ள வேண்டாம்.
ஆரோக்கியமாக வாழ்வோம்… ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.

Post a Comment