எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும்

 

எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். அனைத்து வகையான நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும், உபாதைகளுக்கும், இயலாமைக்கும், நிச்சயமாக ஒரு மருத்துவமோ, தீர்வோ இருக்கும். மருத்துவமோ, தீர்வோ இல்லாத தொந்தரவு யாருக்கும் உருவாவதில்லை.

தலைவலி முதலாக எய்ட்ஸ் வரையில் அனைத்து நோய்களுக்கும் ஏதாவது ஒரு தீர்வு நிச்சயம் இருக்கும். மருத்துவம் தெரியாதவர்களிடமும், மனித உடல் அமைப்பை முழுமையாக அறியாதவர்களிடமும் சிக்கிக்கொண்டு, குணப்படுத்த முடியாத நோய்கள் உள்ளன என்ற தப்பான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். 

குறிப்பாக அனைத்து நோய்களுக்கும் ஆங்கில மருத்துவமே தீர்வு என்ற தவறான முடிவுக்கு வராதீர்கள். இன்று பெரும்பாலானோர் தங்கள் நோய்கள் குணமாகாமல் நிரந்தர நோயாளிகளாகவே வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆங்கில மருத்துவமே அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு என்று நம்புவதுதான்.

எந்த ஒரு நோய்க்கும் நிரந்தரத் தீர்வை தேட வேண்டுமே ஒழிய தற்காலிகமான தீர்வை நாடக்கூடாது. ஒரு நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் முதலில் அந்த நோயின் தொடக்கத்தையும், அதன் மூலகாரணத்தையும், அறிந்துக் கொள்ள வேண்டும். நோயின் மூல காரணத்தை அறிந்து கொள்ளாமல் யாராலும் எந்த நோயையும் குணப்படுத்த இயலாது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top