முகத்தைப் பார்த்து உடலின் பாதிப்பை அறிந்துக் கொள்ளலாம்
ஆரோக்கியம்
0
Comments
முகத்தைப் பார்த்து உடலின் பாதிப்பை அறிந்துக் கொள்ளலாம். ஒரு மனிதனின் உடலில் இருக்கும் அத்தனை வகையான தொந்தரவுகளையும் அவன் முகத்தை மட்டுமே பார்த்து தெரிந்துக் கொள்ள முடியும். ஒரு மனிதனின் உடலின் தன்மைகளையும் அவன் உடலின் ஆரோக்கியத்தையும்; முகப்பொலிவையும், முகத்தில் உண்டாகும் மாற்றங்களையும் கொண்டு கண்டுகொள்ளலாம். இது இயற்கையின் வடிவமைப்பு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை பொய்யாக்கி விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இரசாயன அழகு சாதனங்கள், இயற்கையின் வடிவமைப்பை மாற்றிவிட்டன. உடலின் உள்ளே ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் அந்த நபரின் வெளித்தோற்றம் மட்டும் அழகாக தெரிகிறது. இது ஒரு தவறான செயல், காரணம் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு தன் உடலில் உபாதைகள் இருக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாமல் போகிறது. உதாரணத்திற்கு சில வேளைகளில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் முகத்தைப் பார்த்து அவர் ஏதோ ஒரு தொந்தரவில் இருக்கிறார் என்று கண்டு கொள்வோம் அல்லது மற்றவர்கள் நமது தொந்தரவுகளைக் கண்டுகொள்வார்கள். இரசாயனங்களின் பயன்பாட்டிற்குப் பின் இது முடியாமல் போகிறது.
முகத்திலும் உடலிலும் நீங்கள் தேய்க்கும் அனைத்தும் உங்கள் உடலின் உள்ளுறுப்புகளுக்கும் செல்கின்றன என்பது அப்பட்டமான உண்மை. அதற்கு உதாரணம் வயிறு உப்புசமாக அல்லது வயிற்று வலியாக இருந்தால் வயிற்றில் தைலங்களைத் தேய்க்கும் போது வயிற்றின் உள்ளே மாற்றங்கள் தெரிகிறது அல்லவா? கால் அல்லது மூட்டு வலியாக இருக்கும் போது அவற்றின் மேல் பூசும் தைலங்கள், உள்ளே உணரும் வலியின் தன்மைகளை மாற்றுகிறது அல்லவா? இந்த உதாரணம் போதாதா, நாம் உடலின் மேற்பரப்பில் தேய்க்கும் விசயங்கள் உடலின் உள்ளே செல்கின்றன, மேலும் சில மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதற்கு.
அதனால் முகத்திலும் உடலின் மேற்பரப்பிலும் இரசாயனத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தைலம், கிரீம், எண்ணெய், அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை தேய்க்காதீர்கள்.
அவை உங்கள் உடலின் உள்ளே ஊடுருவும், இரத்தத்தில் கலக்கும். இரத்தம் மூலமாக உடலின் உள்ளுறுப்புகளுக்கு சென்று பல்வகையான பாதிப்புகளை உருவாக்கும்.

Post a Comment