சர்க்கரை நோய் என்பது உண்மையில் என்ன? - 3
சர்க்கரை நோய்
0
Comments
மருந்து கம்பெனிகள் செயற்கையாக உருவாக்கிய குளுக்கோஸ் மருந்தாம் உயிரைக் காப்பாற்றுமாம், மனித உடல் இயற்கையாக உருவாக்கிய சர்க்கரை கெடுதியாம் உயிரைக் கொல்லுமாம். ஏண்டா உனக்கு வந்தா இரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று யாரும் கேட்பதில்லை! இனிமேல் கேளுங்கள்.
சர்க்கரை கெடுதல் என்றால், சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது ஏன் மயக்கம் அடைகிறார்கள். சர்க்கரை அதிகரிப்பது நோய் என்றால் குறைவது நல்லது தானே, பின்பு எதனால் மயக்கம் உண்டாகிறது? சர்க்கரை கெடுதல் என்றால் மருத்துவர்கள் எதனால் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் என்ற சர்க்கரையை உடலில் செலுத்துகிறார்கள்.
மனித உடலுக்கு இனிப்பு மிகவும் அவசியமானது. இனிப்பு இல்லாமல் எந்த மனிதனும் இயங்க முடியாது, எந்த நோயையும் குணப்படுத்த முடியாது. உடலில் சர்க்கரை போதிய அளவு இருந்தால் மட்டுமே உடலால் ஆரோக்கியமாக இயங்க முடியும். அவசரக் காலங்களில் சர்க்கரை அதிகரித்தால் மட்டுமே நோய்களைக் குணப்படுத்த முடியும்.
விபத்தில் சிக்கியவர்கள், கர்ப்பம் தரித்த தாய்மார்கள், எலும்பு முறிவுக்கு ஆளானவர்கள், முதியவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள் என பலவீனமாக இருப்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிப்பது, அவர்களின் நோயையும், தொந்தரவையும் குணப்படுத்தவே ஒழிய அவை நோய்களல்ல.
உடலின் இயல்பான நோய் தீர்க்கும் முறையான சர்க்கரை அதிகரிப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கில மருத்துவர்களிடம் வருகின்ற அனைவரையும் நோயாளிகளாக மாற்றுகின்றனர். வேலியில் போகிற ஓணானை, வேட்டிக்குள் பிடித்து விட்ட கதையாக, ஆங்கில மருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.
Post a Comment