சர்க்கரை நோய் என்பது உண்மையில் என்ன? - 1

 

சர்க்கரை நோய் என்பது உண்மையில் என்ன? இந்தக் கட்டுரையை வாசித்தால் “என்னது இதுதான் சர்க்கரை நோயா? இதைக் காட்டியாடா எங்களை இத்தனை நாளா பயமுறுத்தினிங்க” என்று நிச்சயமாகத் தோன்றும்.

இனிப்பு நீர், சர்க்கரை நோய், அல்லது நீரிழிவு நோய், மேலும் ஆங்கிலத்தில் டைபெடிக் என்று அழைக்கப்படும் இந்த நோயை. மிகக் கொடியது மிகவும் ஆபத்தானது, “அது ஒரு கொடிய மிருகம், அது உங்களைக் கொன்றுவிடும்” என்று ஆங்கிலப் படத்துக்கு தமிழில் டப்பிங் பேசுவது போன்று சொல்வார்கள். “இது மிகவும் ஆபத்தான கொடிய மிருகம் ஓடுங்கள், உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்பதைப் போல பயமுறுத்துவார்கள். உண்மையில் இவை எல்லாம் பொய்களே.

உண்மையிலேயே கொடிய மிருகம் மருந்து கம்பெனி காரர்கள்தான். இரசாயனங்களைக் கொண்டு மனித உடலுக்கு ஒவ்வாத மிகவும் கேடான பக்கவிளைவுகளை உருவாக்கக் கூடிய மருந்துகளை உருவாக்கும் மருந்து கம்பெனி முதலைகள், அந்த மருந்துகளை விற்பனை செய்வதற்காக திட்டமிட்டு நோயாளிகளை உருவாக்குகிறார்கள். ஒன்றும் அறியாத ஆங்கில மருத்துவர்கள் அவர்களுக்குத் துணை போகிறார்கள்.


என்னது ஆங்கில மருத்துவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆம் அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் தான். இயற்கை எவ்வாறு இயங்குகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. நோய்க்கும், கழிவு நீக்கத்திற்கு உள்ள வித்தியாசம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. நோய்கள் எதனால் உருவாகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியாது. உண்மையில், பல ஆங்கில மருத்துவர்களுக்கு மருத்துவமே தெரியாது.

அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம், இந்த தொந்தரவுக்கு இந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். அந்தத் தொந்தரவுக்கு அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும், அவ்வளவுதான். முதலில் ஒரு நோய் ஏன்? எவ்வாறு? உருவாகிறது என்று அறிந்துக் கொண்டால் மட்டுமே அந்த நோயைக் குணப்படுத்த முடியும். வெறும் இயந்திரங்கள் சொல்வதை நம்பிக்கொண்டு மருத்துவம் பார்த்தால் நோய்கள் எவ்வாறு குணமாகும்?

தொடரும்…

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top