பிள்ளைகள் வளர்கிறார்கள் ஆனால் பெற்றோர்கள் வளர்வதில்லை
சிறுவர்கள்
0
Comments
பிள்ளைகள் வளர்கிறார்கள் ஆனால் பெற்றோர்கள் வளர்வதில்லை. பிறந்ததில் இருந்து பிள்ளைகள் வளர வளர, அவர்களின் அறிவும் அனுபவமும் வளர்ந்துகொண்டே இருக்கும். இதை பெரும்பாலான பெற்றோர்கள் உணர்வதில்லை. தன் பிள்ளையை மூன்று வயதில் பார்த்ததைப் போன்றே முப்பது வயதிலும் பார்க்கிறார்கள். குறிப்பாக வசதியான வீட்டு பெற்றோர்கள் இந்த விஷயத்தில் மிகவும் மோசமாக இருக்கிறார்கள்.
உலகம் சரியில்லை, மனிதர்கள் சரியில்லை, பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதையாவது எண்ணிக்கொண்டு, பெரும்பாலான பெற்றோர்கள் எப்போதும் அச்ச உணர்வோடு வாழ்கிறார்கள். பிள்ளைகள் பிறந்த நாள் முதலாக அனுதினமும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
குடும்பத்திலும், பள்ளிக்கூடத்திலும், சமுதாயத்திலும், இந்த உலகின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், பிள்ளைகள் புதிதாக கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள் நேற்று பார்த்ததைப் போன்றே இன்றும் இருக்க மாட்டார்கள். இன்று இருப்பதை போன்று நாளை இருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் வளர்கிறார்கள். முந்தைய தலைமுறையைக் காட்டிலும் புதிய தலைமுறை பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எந்த விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்ளும், விரைவாக புரிந்துகொள்ளும் தன்மையில் இருக்கிறார்கள்.

Post a Comment