நோய்கள் சுயமாக குணமாக
நோய்கள்
0
Comments
நோய்கள் சுயமாக குணமாக. உடலின் இயக்கத்தில் தடைகளை உண்டாக்கும் காரணிகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதும், உடலில் கழிவுகள் சேர்வதற்கு காரணமாக இருக்கும் உணவு வகைகளை தவிர்ப்பதும், உடலின் முறையான இயக்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதும் தான் மருத்துவமாகும்.
உடலில் சரியான உயிர் துடிப்பும், சக்தி ஓட்டமும், சரியான இயக்கமும் இருந்து, புதிய கழிவுகள் சேராமல் பார்த்துக் கொண்டாலே அத்தனை நோய்களும் சுயமாக குணமாகிவிடும்.
நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்
1. உடலில் இயக்க தடைகளை உருவாக்கக் கூடிய செயல்களை தவிர்க்க வேண்டும். எ.கா: இறுக்கமான ஆடைகள் அணிவது, அளவுக்கு அதிகமாக உடல் உழைப்பு செய்வது, செயற்கை இன்பங்கள் அனுபவிப்பது.
2. உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எ.கா: மைதா மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள்.
3. மாமிசம் மற்றும் அசைவ உணவுகள் உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4. தூய வெள்ளை வண்ணத்தில் இருக்கும் அத்தனை வகையான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். எ.கா: தூள் உப்பு, வெள்ளை சீனி, சுவையூட்டி, பாக்கெட் பால், பிளேயர் கோழி.
5. இரசாயன பயன்பாட்டை குறைத்து நிறுத்த வேண்டும். எ.கா: பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோப்பு, ஷாம்பு, பற்பசை, அழகுசாதன பொருட்கள்.
6. இரசாயன மருந்துகளை தவிர்க்க வேண்டும், காரணம் அவை நோய்களை நீக்காமல், நோய்களை அடக்கி வைக்கும் வேலைகளைச் செய்கின்றன. எ.கா: ஆங்கில மருந்துகள், தலைவலி மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட மருந்துகள், புட்டியில் அடைத்த மருந்துகள்.
7. காலையில் விரைவாக எழுந்திருக்க வேண்டும். காலையில் சாதாரண பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும்.
8. காலை அல்லது மாலை வேளைகளில் சிறிது நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யலாம். அதிகமாக வற்புறுத்தி செய்யக்கூடாது. மெதுவாக எளிமையான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

Post a Comment