மனித உடலில் உருவாகும் சக்தி
ஆரோக்கியம்
0
Comments
மனித உடலில் உருவாகும் சக்தி. மனித உடல் இயற்கையால் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மனிதன் உட்கொள்ளும் ஒவ்வொரு வேளை உணவும், அந்த உணவிலிருந்து உருவாகும் சக்தியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு உடலுக்கு பயன்படுகிறது.
உடலில் உற்பத்தியாகும் சக்தியில் ஏறக்குறைய 30% உடலின் இயக்கத்திற்கும், 30% உணவின் ஜீரணத்துக்கும், 30% உடலின் தற்காப்பிற்கும், உபாதைகளைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயக்கங்களுக்குப் பிறகு மீதமிருக்கும் சக்தி, சேமிப்பு சக்தியாகவும், அவசரகால சக்தியாகவும், உடலில் சேமிக்கப்படுகிறது.
உடலின் இயக்கத்துக்கு பயன்பட்டது போக மீதமிருக்கும் சேமிப்பு சக்திதான் மனிதனின் அவசரக் காலத்தில் பயன்படுகிறது. உதாரணத்துக்கு, நாய் துரத்தினாலோ, விபத்து நடந்தாலோ, உயிருக்கோ உடைமைக்கோ அச்சுறுத்தல் உண்டானாலோ, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உடல் சேமிப்புச் சக்தியைப் பயன்படுத்துகிறது.
இரசாயன மருந்துகளை நெடுநாட்களுக்கு உட்கொள்பவர்களுக்கு சேமிப்பு சக்தி இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். அதனால் தான் நெடுநாட்களாக ஆங்கில மருந்துகளை உட்கொள்பவர்கள், கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு எளிதாக ஆளாகிறார்கள். அல்லது ஏதாவது நோய் உண்டானால் முழுவதுமாக உடலாலும், மனதாலும் உடைந்து, சோர்ந்துவிடுகிறார்கள்.

Post a Comment