உடலின் உறுப்புகள் பழுதாகாது

 

உடலின் உறுப்புகள் பழுதாகாது. மனித உடலின் எந்த உறுப்பும் அதை பயன்படுத்துவதால் பழுதாகாது. 

1. சிந்திப்பதால் மூளை பழுதாகாது.
2. பார்ப்பதால் கண்கள் பழுதாகாது.
3. கேட்பதனால் காதுகள் பழுதாகாது.
4. நுகர்வதால் மூக்கு பழுதாகாது.
5. பேசுவதால் வாய் பழுதாகாது.
6. தூக்குவதால் கரங்கள் பழுதாகாது.
7. நடப்பதால் கால்கள் பழுதாகாது.
8. இணை சேருவதால் பிறப்புறுப்பு பழுதாகாது.

இறைவனோ இயற்கையோ நீங்கள் எந்த பெயரில் அழைத்தாலும் உங்கள் உடல் மிக சிறப்பாக உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்து அளவில் தான் படைக்கப் பட்டிருக்கிறது.

அதனால் உங்கள் உடலின் இயக்கங்களினால் எந்த உறுப்பும் பாதிக்கப்படாது, பழுதாகாது. ஒருவேளை உங்கள் உடலில் ஏதாவது பாதிப்பு தோன்றினால், அது வயது அதிகரிப்பதால் உருவானது அல்லது உறுப்பை அதிகமாக பயன்படுத்துவதால் உருவானது என்று முன் முடிவுக்கு வரக்கூடாது.

அந்த தொந்தரவு உருவான உண்மையான காரணத்தை ஆராய்ந்து கண்டுகொள்ள வேண்டும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top