உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்
இயக்கம்
0
Comments
உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். மனித உடலில் அனுதினமும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணுவும் பிறந்து, இறந்து, மறுபடியும் பிறந்துக் கொண்டிருக்கிறது, ஒரு ஆண்டுக்குள் முழு உடலும் புதுப்பிக்கப் பட்டுவிடுகிறது.
அதனால் ஒவ்வொரு மனிதனும் ஆண்டுக்கு ஒருமுறை புதிதாக பிறக்கிறான். மனித உடலில் ஒவ்வொரு பகுதிக்கும், உறுப்புக்கும், தன்னை புதுப்பித்துக் கொள்ளும் கால அளவு மாறுபடலாம். மிகத் தாமதமாக ஒரு உறுப்பு தன்னை புதுப்பித்துக் கொள்ள ஆறுமாதங்கள் மட்டுமே ஆகிறது.
புதுப்பிக்கும் கால அளவுப்படி பார்க்கையில் மனித உடலில் உள்ள எந்த ஒரு உறுப்பும் ஆறு மாதங்களுக்கு மேல் நோய்வாய் படக்கூடாது. அல்லது எந்த நோயாக இருந்தாலும் ஆறு மாதங்களுக்குள் குணமாகிவிட வேண்டும். அது கொடிய நோயோ அல்லது எளிய நோயோ ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்க கூடாது.
ஒரு வேளை ஆறு மாதங்களுக்கு மேல் மருத்துவம் பார்த்தும், ஒரு நோய் குணமாகவில்லை என்றால், தவறான மருத்துவம் செய்கிறீர்கள், அல்லது நீங்கள் பார்க்கும் மருத்துவம் உங்கள் நோய்க்கு தொடர்பில்லாததாக இருக்கலாம். தவறான மருத்துவம் மூலமாக எந்த நோயும் குணப்படுத்த முடியாது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உடல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப் படுவதால் உங்கள் உடலின் இயக்கத்துடன் ஒத்துழைத்து, அதன் அறிகுறிகளையும், கட்டளைகளையும் பின்பற்றினால்; ஒரு ஆண்டுக்குள் உங்கள் உடலில் இருக்கும் தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் திரும்பிவிடும்.

Post a Comment