இரசாயனங்கள் கர்பகாலத்திற்கு கேடானவை

 

இரசாயனங்கள் கர்பகாலத்திற்கு கேடானவை. கர்ப்பம் தரித்த தாய்மார்கள் அல்லது கர்ப்பம் தரிக்க ஆசைப்படும் பெண்கள், எந்த காரணத்தைக் கொண்டும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. 

இரசாயனங்களை உணவாகவோ, பானமாகவோ, ஒப்பனையாகவோ, மருந்தாகவோ, ஊசியாகவோ எந்த வகையில் பயன்படுத்தினாலும் அது அந்த தாய்க்கும் அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தீங்கை விளைவிக்கும். கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள், அந்த தாயின் உடலையும் அவரின் கர்ப்பப்பையையும் முழுமையாக இயங்கவிடாமல், அவர் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகின்றன. 

ஒரு கர்ப்பமுற்ற தாய் இரசாயனங்களை உட்கொள்ளும் போது அவரின் உடலானது அந்த இரசாயனங்களை எதிர்த்துப் போராடும். உடலின் உள்ளே செல்லும் இரசாயனங்களை முறிப்பதிலும், அதை வெளியேற்றுவதிலும், பெருமளவு சக்திகளை செலவழிப்பதால், அவர் கருவின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சக்தி போதாமல் குழந்தைக்கு குறைகள் உண்டாகின்றன.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top