படிக்காத பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லையா?

 

படிக்காத பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லையா? பள்ளிப் பாடங்களைப் படித்தால் இந்த உலகில் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை அனைவரிடமும் இருக்கிறது. 

பள்ளிக்கூட படிப்பைக் கூட தாண்டாத பலர் வியாபாரம் செய்வதையும், கல்லூரி படிப்பைக் கூட முடிக்காத பலர் கோடீஸ்வரர்களாக இருப்பதையும், எழுதப்படிக்கத் தெரியாத பலர் சகல வசதிகளுடன் வாழ்வதையும் நாம் காண முடியும்.

அதே நேரத்தில் பல்கலைக்கழகம் வரையில் படித்தவர்கள் கூட வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் இருப்பதையும், இந்த உலகில் வாழத் தெரியாமல் தவிப்பதையும் கண்கூடாக காணலாம். 

இவற்றை கண்கூடாகக் கண்டப் பிறகும், பள்ளிப் பாடம் படித்தால் அனைத்தும் கிடைத்துவிடும், படிக்காதவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற மாயையை மட்டும் மாற்ற இயலவில்லை.

ஒரு குழந்தைக்கு படிப்பு சரியாக ஏறவில்லை அல்லது படிப்பில் நாட்டம் இல்லை என்றால் என்ன செய்வது? படி படி என்று அவர்களை நச்சரிப்பதால் எந்த பயனுமில்லை. மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், ஆசிரியர், என ஒவ்வொரு வேலை செய்ய விரும்புவோருக்கு ஒரு படிப்பு இருக்கிறது. குறிப்பிட்ட எந்த வேலைக்கும் செல்ல விருப்பம் இல்லாத சிறுவர்கள் என்ன படிக்க வேண்டும்?

குடும்பத் தொழில் அல்லது சுய தொழில் செய்ய விரும்பும் குழந்தைகளும், விவசாயம் பண்ணைப் போன்ற தொழில் செய்ய விரும்பும் குழந்தைகளும் என்ன படிக்க வேண்டும்?


பள்ளிக்கூடத்தில் படிப்பது மட்டுமல்ல கல்வி. ஒரு சிறுவனின், மனிதனின் அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்வதுதான் கல்வி. ஒரு சிறுவனுக்கு பள்ளிக் கல்வியின் மீது நாட்டம் இல்லை என்றால் அவனை மொழியையும் அடிப்படைக் கணிதத்தையும் கற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளியில் எல்லா பாடத்தையும் அரைகுறையாக கற்றுக் கொள்வதைவிடவும், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களையும் கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற கணித படத்தையும் மட்டுமாவது முழுமையாக கற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

மொழிப் படத்தையும் கணிதத்தையும் கற்றுக் கொண்டால் அவை வாழ்நாள் முழுமைக்கும் உதவியாக இருக்கும். வியாபாரம், சுய தொழில், விவசாயம், பண்ணை, வேலை, குடும்பம், பொது வாழ்க்கை, என எல்லா சூழ்நிலையிலும் அவை கைகொடுக்கும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top