மருத்துவம் ஒரு சேவையல்ல, வியாபாரம்
இலவசம்
0
Comments
மருத்துவம் ஒரு சேவையல்ல, வியாபாரம். பல நாடுகளில் மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச மருத்துவம் வழங்கும் நாடுகள் கூட ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று தன் மக்களுக்கு கற்றுத் தருவதில்லை.
இந்த உலகில் அனைவருக்கும் ஆரோக்கியம் தான் மிகவும் இன்றியமையாதது. ஆனாலும் கூட பள்ளிக்கூடங்களில் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை கற்றுத் தருவதில்லை.
குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனைகளும். குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், இலவச மருத்துவ சேவையும் அறுவை சிகிச்சையும்; அனைவருக்கும் மருத்துவ காப்பீடும் இலவசமாக வழங்கும் அரசாங்கங்கள் கூட ஏழ்மையிலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று பொதுமக்களுக்கு கற்றுத் தருவதில்லை.
இலவச சிகிச்சைகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும், மருத்துவ பராமரிப்புக்கும், மருந்துகளுக்கும், அரசாங்கம் செலவு செய்யும் தொகையில் பாதியை பயன்படுத்தினாலே எல்லா மக்களுக்கும் ஆரோக்கியமாக வாழும் வழிமுறையை கற்றுத் தந்துவிடலாம். ஆனாலும் வளர்ந்த நாடோ, வளரும் நாடோ, ஏழை நாடோ, எந்த நாட்டிலும் அதன் அரசாங்கங்கள் இந்த திட்டத்தை வகுப்பதும் இல்லை செயல்படுத்துவதும் இல்லை.
இதற்கு காரணம் மருத்துவம் மூலமாகவும் மருந்து விற்பனையின் மூலமாகவும் லாபமீட்டும் நிறுவனங்கள் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்த விடாமல் எல்லா அரசாங்கங்களையும், அரசியல்வாதிகளையும், அதன் அதிகாரிகளையும் கட்டுப்படுத்துவார்கள்.

Post a Comment