மலச்சிக்கல் உருவாக காரணங்களும் அவற்றுக்கான தீர்வுகளும்

 

மலச்சிக்கல் உருவாக காரணங்களும் அவற்றுக்கான தீர்வுகளும். வாய்வழியாக வயிற்றின் உள்ளே செல்லும் அனைத்து உணவுகளும் முழுமையாக ஜீரணமாகி, உடல் சத்துக்களைப் பிரித்து எடுத்துக் கொண்ட பிறகு மீதம் இருப்பவற்றை கழிவாக உடல் வெளியேற்றிவிட வேண்டும்; இது இயற்கையின் நியதி. ஆனால் பலருக்கு இந்த சுழற்சி முறையாக நடைபெறுவதில்லை. “அஜீரணமும், மலச்சிக்கலும், சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள்” என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். செரிமானக் குறைபாடுகள் தான் மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும், எல்லாத் தொந்தரவுகளுக்கும் முதன்மை காரணமாக இருக்கிறது, அடுத்ததாக மலச்சிக்கல். 

மலம் கழிப்பதில் சிக்கல் உண்டாகி, முறையாக மலம் கழிக்க முடியாமல் பலர் அவதியுறுகின்றனர். மலச்சிக்கலில் பல வகைகள் உண்டு. சிலருக்கு “எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது, ஆனால் கண்ட நேரத்தில் வரும், வந்தாலும் தடுக்க முடியாது வராவிட்டாலும் ஏன் என்று கேட்க முடியாது”. சிலருக்கு “வரும் ஆனால் வராது”. சிலருக்கு “வந்துடு வந்துடு தானா வந்துடு என்று கெஞ்ச வேண்டியது வரும்”. சிலருக்கு "ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை தான் வரும்". 

என்னிடம் வைத்தியத்துக்கு வந்த ஒருவருக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தான் மலம் வெளியேறுமாம். சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு உணவு உட்கொள்வதற்கு முன்பாக மலம் கழிக்க வேண்டிய உணர்வு உண்டாகும். இன்னும் பல வகையான மலச்சிக்கல்கள் உள்ளன.

உடலின் உள்ளே நாம் அனுப்பும் உணவுகளின் கழிவுகள் வெளியேற முடியாத போது, கழிவுகள் உடலின் உள்ளேயே தேங்கிவிடுகின்றன. இப்படி உடலில் தேங்கும் கழிவுகள், தேங்கிய உறுப்புகளில் தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top