குழந்தைக்கு சரியான பெயரைச் சூட்ட வேண்டும்
ஆற்றல்
0
Comments
குழந்தைக்கு சரியான பெயரைச் சூட்ட வேண்டும். நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது அவர்கள் காலத்திற்கு முன்னதாக சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து அவற்றை குழந்தைகளுக்கு சூட்டினார்கள்.
இறையடியார்கள், கொடைவள்ளல்கள், தலைவர்கள், சிறந்த மனிதர்கள், அல்லது பெற்றோரின் பாட்டன் பூட்டிகள், தாத்தா பாட்டிகள், என்று சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த பெரியோர்களின் பெயர்களை சூட்டினார்கள்.
நமக்கு முந்தைய தலைமுறை வரையில் தங்களின், தாத்தா, பாட்டி, தாய், தந்தை, போன்றவர்களின் பெயரைச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் தெய்வங்களின் பெயர்களையும், தெய்வீக சக்தி கொண்டவர்களின் பெயர்களையும், சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இவற்றுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால், ஒரு மனிதனின் பெயர் என்பது சாதாரணமாக அவனை அழைக்க அடையாளப்படுத்த பயன்படுத்தும் ஒரு சொல் மட்டும் அல்ல. அது ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணைக்கூடிய மந்திரம்.
ஒரு மனிதனை ஒரு சொல்லக் கொண்டு, அல்லது ஒரு குறிப்பிட்ட பெயரைக் கொண்டு மீண்டும் மீண்டும் அழைக்கும் போது அந்த சொல் ஒரு மந்திரமாகவே மாறுகிறது. அந்த மந்திரம் அவருடைய வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கக்கூடியது.
சரியான, வார்த்தையும், உச்சரிப்பும், பொருளும், கூடிய ஒரு பெயர் அந்த நபரின் வாழ்க்கையில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் நிம்மதியையும் உருவாக்கும். அதே ஒரு நபரின் பெயர் தவறாக அமைந்து தவறான பொருளையும் உச்சரிப்பையும் அதிர்வலையையும் கொண்டிருந்தால் அது அந்த நபரின் வாழ்க்கையை சீரழிக்கக் கூடியது.
அதனால் குழந்தைகளுக்கு பெரியார் சூட்டும் போது “ஏ”யில் தொடங்க வேண்டும் “பி”யில் தொடங்க வேண்டும் என்று பெயர் சூட்டாமல், சினிமா நடிகர், அரசியல் தலைவர், பிரபல்யமான பெயர் என்றும் சூட்டாமல். சிறந்த பொருளையும் சிறந்த அதிர்வலையையும் கொடுக்கக்கூடிய சிறந்த பெயர்களை தேர்ந்தெடுத்து சூட்ட வேண்டும்.

Post a Comment