ஜோதிடம் பார்க்கலாமா கூடாதா?

 

(Photo by Gayatri Malhotra on Unsplash)

ஜோதிடம் பார்க்கலாமா கூடாதா? இன்றைய காலகட்டத்தில் ஜோதிடம் ஒரு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. ஜோதிடம், ஜாதகம், எண் கணிதம், என்ற பெயர்களில் ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்கின்ற, இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

தோஷம் கழிக்கிறேன், தீட்டுக் கழிக்கிறேன், பரிகாரம் செய்கிறேன், என்ற பெயரில் பலரும் பலரை ஏமாற்றுகிறார்கள். இவற்றின் காரணமாக மக்களுக்கு ஜோதிடத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் ஜாதகத்தை துல்லியமாக கணிக்கக்கூடிய நபர்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள். 

எதற்கெடுத்தாலும் ஜோதிடத்தை நம்பி இருக்காமல், அடிக்கடி ஜோதிடம் கணிக்காமல் இறைவனை நம்புங்கள், உங்களை நம்புங்கள். மன திருப்திக்காக, துல்லியமாக கணிக்கக்கூடிய ஜோதிடர்கள் இருந்தால் ஒரு முறை ஜோதிட குறிப்பு எழுதிக் கொள்ளலாம்.

மற்றப்படி வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் போது அல்லது தொடங்கும் போது மட்டும் ஜோதிடம் கணிக்கலாம். உதாரணத்துக்கு புது வீடு கட்டுதல், புதிய தொழில் தொடங்குதல், திருமணம் போன்றவை.

மற்றப்படி இறைவன் விதித்தபடி தான் உங்கள் வாழ்க்கை அமையும் அதனால் இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தைரியமாக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். நல்லதே நடக்கும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top