அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள் - 3


 அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள். நீங்கள் முதலில் வெளி உலகத்துக்கு வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் வெளியுலகத்துடன் வாழக் கற்றுக்கொடுங்கள். மனிதர்கள் அதிகமாக இருக்கும், கூடும் இடங்களுக்கும், அடிக்கடி உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அண்டை வீட்டுப் பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகள் சேர்ந்து விளையாட அனுப்புங்கள். உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுடன், உங்கள் குழந்தைகள் இயல்பாக பழக பேச அனுமதியுங்கள்.

இயற்கையுடன் இணைந்து வாழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். ஆறு, குளம், கடல், போன்ற நீர் நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று நீந்தச் சொல்லுங்கள். காடு, மலை, கடல், போன்ற இடங்களுக்கு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்லுங்கள். இயற்கையை, விலங்குகளை மற்றும் மனிதர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு ஆயிரம் விசயங்களை புத்தகங்களில் இருந்து கற்றுக் கொடுப்பதை விடவும், ஒரு சில விசயங்களை இயற்கையில் இருந்து கற்றுக் கொடுத்தால், அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும். புத்திசாலிக் குழந்தையால் அறிவாளியாக முடியும். ஆனால் எந்த அறிவாளியாலும் புத்திசாலியாக முடியாது. சிறுவயதைத் தாண்டிவிட்டால், புத்தியைக் கூர்மைப் படுத்துவது சிரமம். இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top