அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள் - 2


 அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள். அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அறிவாளி தான் கற்றுக் கொண்டவற்றை, கற்றுக்கொண்ட துறையில் பயன்படுத்துவார். உதாரணத்திற்கு காரை பழுதுபார்க்க கற்றுக்கொண்டவர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த அறிவைக் கொண்டு காரை மட்டுமே பழுது பார்க்க முடியும். அதை விடுத்து மற்ற வாகனங்களைப் பழுது பார்க்க அவருக்கு தெரியாது, அவை பற்றிய அறிவும் புரிதலும் இருக்காது. ஆனால் ஒரு புத்திசாலி இதே காரை பழுதுபார்க்கும் படிப்பைப் படித்தாலும், தான் கற்றுக்கொண்ட இந்த அறிவை மற்ற துறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற புரிதலும் இருக்கும்.

அறிவாளி ஒரு சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருடைய அனுபவத்தில் அல்லது படிப்பில் இருந்தால் அதைப் பயன்படுத்துவார். இல்லை என்றால் அந்த சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டு நடப்பார். புத்திசாலிக்கு ஒரு சூழ்நிலையைச் சமாளித்து, அதிலிருந்து வெளிவரும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். புத்திசாலி அவர் வாழ்நாளிலேயே சந்தித்திராத, கேள்விப்பட்டிராத ஒரு பிரச்சினையை எதிர்கொண்டாலும் கூட, அதிலிருந்து வெளிவரும் ஆற்றலும் திறமையும் இயல்பாக இருக்கும்.

ஒரு குழந்தை படிப்பதினால் அறிவாளி ஆகிறான் ஆனால் அவனது அனுபவங்களின் மூலமே புத்திசாலி ஆகிறான். குழந்தைகளின் பெரும்பாலான அறிவு வளர்ச்சி பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே முடிந்துவிடுவதால், வெளி உலகத்தைப் பார்க்காது, மனிதர்களுடன் கலக்காது வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், என்று எந்த வகையான தொழில் புரிந்தாலும் அவர்களுக்கு புத்திக்கூர்மை குறைவாகவே இருக்கும்.

அவர்களின் துறையைச் சாராத ஒரு சூழ்நிலையை, அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. அவற்றைச் சமாளிக்க பிறரின் உதவியையே நாடுகிறார்கள். வெளி மனிதர்களுடனும், பிற குழந்தைகளுடனும் விளையாடி, மண்ணில் புரண்டு, குளத்தில் குதித்து, ஆற்றில் நீந்தி, இயற்கையுடனும், மனிதர்களுடனும், மக்களுடனும், இந்த சமுதாயத்திலும் கலந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக உருவாகிறார்கள். 

பட்டபடிப்பு இல்லாத குழந்தைக்குக் கூட, எவ்வாறான சூழ்நிலையாக இருந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் இயற்கையாகவே உருவாகிவிடுகிறது. சிறிய வருமானம் இருந்தால் கூட அதை வைத்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடிய புத்திசாலித்தனம் அவர்களுக்கு அமைந்து விடுகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top