அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள் - 1

 

அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கின்னஸ் சாதனைக்கு தயார் செய்வதைப் போன்று வளர்க்கிறார்கள். அளவுக்கு மீறிய பாசமும் கவனிப்பும் கட்டுப்பாடும் கல்வியும் அக்குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன. இந்த வளர்ப்பு முறை எதிர்காலத்தில் எதார்த்த வாழ்க்கையை புரிந்துக் கொள்ளாதவர்களாகவும் சமுதாயத்தில் வாழத் தெரியாதவர்களாகவும் மாற்றிவிடுகிறது.

குழந்தையை சிறப்பாக வளர்ப்பதாக நினைத்து கொண்டு, பல பெற்றோர்கள் தங்களின் கவனம் முழுவதையும் குழந்தையின் மீது வைத்திருக்கிறார்கள், இது தவறான அணுகுமுறையாகும். இதற்கு மாற்றாக குழந்தையை வளர்க்கும் போது முழு கவனத்தையும் தன்மீதும் அந்தக் குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்களின் மீதும் வைத்திருக்க வேண்டும். குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? என்பதை குழந்தைகள் பிறந்தது முதலே கவனிக்கத் தொடங்குகிறார்கள். 

ஒரு குழந்தை பெரியவன் ஆனதும் எவ்வாறு நடந்து கொள்வான்? எவ்வாறு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வான்? எவ்வாறு தன் வாழ்க்கையை வாழ்வான்? என்பதெல்லாம் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தவைகளை கொண்டும், பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுத்தவைகளைக் கொண்டு அமைவதில்லை. மாறாக அந்த குழந்தை தனது பன்னிரண்டாவது வயதுக்குள், பார்த்த, கேட்ட, அனுபவித்த, விசயங்களைக் கொண்டே அமைகின்றன. தன்னை சுற்றி இருக்கும் பெரியவர்களின், செயல்களையும், நடவடிக்கைகளையும், சொற்களையும், பார்த்து, கேட்டு, பின்பற்றி குழந்தைகள் வளர்க்கிறார்கள்.

புத்திசாலிக்கும் அறிவாளிக்கும் உள்ள வித்தியாசம் பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு குழந்தையை நல்ல பள்ளிக்கூடத்தில், நன்றாக பாடம் நடத்தக் கூடிய ஆசிரியரிடம் கல்வி கற்கவைத்தால். அந்த ஆசிரியர் அந்த குழந்தையை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் எத்தனை பள்ளிக்கூடத்தில், எத்தனை பல்கலைக்கழகத்தில், கற்றாலும் எந்த குழந்தையையும் புத்திசாலியாக மாற்ற முடியாது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top