மஞ்சள் பாவாடை கவிதை

 
குளிர்ந்தும் குளிராத இரவு
இருண்டும் இருளாத வானம்
மறைத்தும் மறைக்காத மேகம்
உதித்தும் உதிக்காத நிலவு

சில்லென வீசும் காற்றை
துணைக்கு அழைத்துக்கொண்டு
பூமியில் பாதம் பட்டும் படாமல்
புல்வெளியில் நடந்து வருகிறாள்
அவள்…

மல்லிகை தோட்டத்தில்
ஒற்றை ரோஜா அதுவும்
மஞ்சள் வர்ணத்தில்

மனம் தீண்டும் பாவாடை
மண் தீண்டாமல்
இரு கையால் தாங்கி
மெல்ல உயர்த்தி
நடந்துவருகிறாள்
தேவதையாக

நட்சத்திரங்களுக்குள்
சலசலப்பு யாரது பூமியில்
நமக்குப் போட்டியாக என்று
நானென்ன செய்வேன்

மனம் குழைந்தேன்
சிந்தனை இழந்தேன் 
சிலையென நின்றேன்
பெண் சிலையே கண்டு

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top