மனம் குணப்படுத்தும் நோய்கள்

 

மனம் குணப்படுத்தும் நோய்கள் (பிளாசிபோ எபெக்ட்). சிலருக்கு நோய் உருவானால், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அந்த நோய் குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு ஒரு குறிப்பிட்ட மருத்துவரைச் சந்தித்தால் உடலில் தொந்தரவுகள் குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு உடலில் தொந்தரவு உருவானால் மருந்து மாத்திரைகள் உட்கொண்டால் மட்டுமே அந்த தொந்தரவு குறையும். சிலருக்கு சில செயல்களைச் செய்தாலும், சில மனிதர்களைச் சந்தித்தாலும், சில இடங்களுக்குச் சென்றாலும், உடலில் தொந்தரவுகள் குறைந்துவிடும். ஒரு சிலருக்கு இவை எதையுமே செய்யாமலேயே மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே தூங்கி எழுந்தாலே அனைத்து தொந்தரவுகளும் குறையத் தொடங்கிவிடும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பலர் தங்களின் தொந்தரவுகள் குறைந்து வீடு திரும்புவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இரசாயனங்கள் நோய் தீர்க்கும் மருந்துகள் அல்ல, இரசாயனங்களால் நோய்களைக் குணப்படுத்த முடியாது என்று பலர் கூறுகிறார்கள், இது உண்மை என்றால் இவர்களின் தொந்தரவுகள் எவ்வாறு குறைந்தன?

இங்குதான் மனம் தனது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த மருந்தை உட்கொண்டால் நோய் குணமாகும், இந்த மருத்துவரைச் சந்தித்தால் நோய் குணமாகும், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் நோய் குணமாகும் என்பவைப் போன்ற நம்பிக்கைகள் உள்ளவர்களுக்கு அந்த செயலைச் செய்த உடனேயே தங்களின் நோய்கள் குணமாகத் தொடங்கிவிடுகின்றன.

இரசாயனங்கள் மருந்துகள் அல்ல என்பதும் இரசாயனங்கள் நோய்களைக் குணப்படுத்தாது என்பது நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மை. ஆனால் அவற்றை உட்கொள்பவர்களின் மனமானது இந்த மாத்திரை தான் என் உயிரைக் காப்பாற்றக்கூடிய மருந்து என்று நம்பிக்கை கொண்டுவிட்டால், அவரின் நம்பிக்கையின் பெயரிலேயே நிச்சயமாக அவரின் நோய்கள் குணமாகத் தொடங்கிவிடும். அதே நேரத்தில் அவர் உட்கொண்ட இரசாயனங்களினால் உண்டாகும் பக்கவிளைவுகளும் இருக்கும்.

இதை ஆங்கிலத்தில் பிளாசிபோ எபெக்ட் (Placebo effect) என்று அழைப்பார்கள். மனம் மட்டும் என் நோய்கள் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும். அது எவ்வளவு கொடுமையான நோய்களாக இருந்தாலும் சரியே. உடல் உறுப்பு பாதிப்பு உள்ளவர்கள் கூட இந்த நிலைமை மாறும் என் உடல் உறுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் நிச்சயமாக அவர்களின் தொந்தரவுகள் நீங்கி, அவர்களின் உடல் உறுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top