புண்கள், பருக்கள், கட்டிகள் உருவாக காரணம்
கட்டிகள்
0
Comments
புண்கள், பருக்கள், கட்டிகள் உருவாக காரணம். விபத்தின் காரணமாகவோ அல்லது மற்ற செயற்கை காரணத்தினாலோ அல்லாமல் உடலில் புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவை தோன்றுவதில்லை. ஒரு வேளை எந்த காரணமும் இல்லாமல் உடலில் இவை தோன்றினால் அவை ஏதோ ஒரு பாதிப்பை நமக்குச் சொல்ல முயல்கின்றன என்று பொருளாகும்.
எந்த காரணமும் இல்லாமல் உடலில் தோன்றுகின்ற புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவை உடலின் உள்புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைகளையும் மாறுதல்களையும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டுகின்றன. பல வேலைகளில் உடலின் உள்ளே சேர்ந்திருக்கும் கழிவுகளை அகற்றுவதற்காக இவை தோன்றுகின்றன.
புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவற்றின் மூலமாக ரத்தத்திலும் உடலிலும் சேர்ந்திருக்கும் கழிவுகள் உடலை விட்டு வெளியேறுகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உருவாவதன் நோக்கமும் இதுதான்.
உடலின் மேற்பரப்பில் காட்டும் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு உடலுடன் இணைந்து செயல்பட்டு உடலின் உள்ளே இருக்கும் கழிவுகளை வெளியேற்றிக்கொள்ள வேண்டும், உண்மையான நோயைக் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து உடல் காட்டும் அறிகுறிகளுக்கு மருத்துவம் பார்த்து புண்கள், பருக்கள், கட்டிகள், போன்றவை உடலுக்குள் மறைத்துக் கொண்டாலும் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அப்படியேதான் இருக்கும்.

Post a Comment