உணவின் இரசாயனங்களில் இருந்து உடலைப் பாதுகாக்க

 

உணவின் இரசாயனங்களில் இருந்து உடலைப் பாதுகாக்க. ஒவ்வொரு உணவையும் ஆராய்ந்து அவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவற்றில் என்னென்ன காலக்கபட்டுள்ளன என்பதை ஆராய்வதை விடவும், எப்படிச் சாப்பிடுவது என்பதை அறிந்துகொள்ளுங்கள்; மற்றதை உங்கள் உடல் கவனித்துக் கொள்ளும்.

ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே உடலுக்கு ஒவ்வாத ஒரு உணவை உட்கொண்டு விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? அது உடலுக்குள்ளேயே இருக்குமா அல்லது உங்கள் உடல் அதை வெளியேற்றிவிடுமா?

உடலுக்கு ஒவ்வாத ஒரு உணவை உட்கொள்ளும் போது, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் மூலமாக அவை வெளியேற்றப்பட்டு விடுகின்றன அல்லவா? அமிர்தமாகவே இருந்தாலும், உடலுக்கு ஒவ்வாதவை என்றால் உங்கள் உடல் தானாகவே அவற்றை வெளியேற்றிவிடும். அப்புறம் என்ன பயம். உங்கள் உடலுக்குத் தெரியாத விசயமா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது?

நீங்கள் எதை உட்கொண்டாலும் அதிலிருந்து எந்தத் தொந்தரவும் உருவாகக் கூடாது என்றால், முதலில் உணவை உட்கொள்ளும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.


1. உட்கொள்வதற்கு முன்பாக உணவைப் பாருங்கள்

2. உணவின் வாசனையை நுகருங்கள், வடிவத்தை ரசியுங்கள்.

3. தட்டில் இருக்கும் அத்தனை உணவுகளில் இருந்து கொஞ்சம் தனித் தனியாக வாயில் போட்டுச் சுவையுங்கள்.

4. தட்டில் இருக்கும் உணவை விரல்களால் நன்றாகப் பிசைந்து பின்னர் உண்ணுங்கள்

5. உணவை வாயில் போட்டு, எச்சில் கலந்து நன்றாக மெல்லுங்கள்

6. உணவை மென்று உணவின் ருசி மாறிய பிறகு விழுங்குங்கள்

7. சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாதீர்கள்.

இவை ஏழையும் முறையாகச் செய்தால். இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், கலப்படங்கள் பற்றிய பயம் தேவையில்லை. உடல் உணவை முறையாக ஜீரணித்து, எல்லாக் கழிவுகளையும், இரசாயனங்களையும் முறையே வெளியேற்றிவிடும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top