பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளைப் பெறும் வழிமுறை

பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளைப் பெறும் வழிமுறை. பிரபஞ்சத்திடம் இருந்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் பெறுவதற்குத் தேவையான அடிப்படைத் தகுதியானது முதலில் இதுவரையில் நீங்கள் பெற்ற அனைத்து உதவிகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி செலுத்த வேண்டும். இதுவரையில் உங்களுக்குக் கிடைத்த அனைத்திற்கும் நன்றி செலுத்தி, உங்களிடம் இருப்பதைக் கொண்டும் திருப்தி அடைய வேண்டும்.

இதுவரையில் கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்தாத வரையிலும், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாத வரையிலும் புதிதாக எதையும் அடைவதற்கும் கேட்பதற்கும் உங்களுக்கு தகுதி இல்லாமல் போகிறது. திருப்தியும் நன்றியுணர்வும் இல்லாமல் எதைக் கேட்டாலும் கிடைக்காது.

சிறியதாகவோ பெரியதாகவோ எது கிடைத்தாலும், எது உங்களிடம் இருந்தாலும், அதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்துங்கள். நன்றி உணர்வோடு இருங்கள். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் செல்வமோ, பணமோ, சொத்தோ, நகையோ, ஆரோக்கியமோ, மகிழ்ச்சியோ, அன்போ, காதலோ, நிம்மதியோ, அனுபவமோ, அனைத்திற்கும் நன்றி செலுத்துங்கள். நன்றி உணர்வோடு இருங்கள்.

இதுவரையிலும், இப்போதும், இதற்குப் பிறகும் உங்களிடம் இருக்கும் கிடைக்கும் அனைத்திற்கும் நன்றி செலுத்துங்கள். இருப்பதைக் கொண்டு முழுத் திருப்தி அடையுங்கள். நன்றி உணர்வோடு இருங்கள். அதற்குப் பிறகு உங்களின் தேவைகள் அனைத்தும் நீங்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்யப்படும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top